Posts

"நலம் தரும் நற்குமரி" சிற்பம் வாழ்வகத்தின் பயிற்சி அழைப்பு:

Image
"நலம் தரும் நற்குமரி" சிற்பம் வாழ்வகத்தின் பயிற்சி அழைப்பு:  சோற்றுக்கற்றாழையோடு 100க்கும் மேற்பட்ட பச்சை & உலர் (Fresh & Dried) மூலிகைகளைக் கொண்டு கூந்தல் வளம் & உடல் நலத்திற்கான எண்ணை (Multi-herbs, Multipurpose Hair & Body Oil) + சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடக்கூடிய "குமரி இளகம்" (Aloe vera Halwa) + சோற்றுக்கற்றாழை சுவைச்சாறு (Welcome Drink) தயாரிப்பதுடன் அய்யாவின் பயிற்சிக்கு முதல் முறையாக வருபவர்களுக்கான அடிப்படைப் பயிற்சிக்குரிய செய்திகள் + செயல் விளக்க நிகழ்வுகள். (அனைவரும் சேர்ந்து செய்து அனைவரும் பகிர்ந்து கொள்ளும் முறை) *நாள்:* 26-01-2022 புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை. (மதிய உணவுடன்) (குடியரசு தின விடுமுறை நாள் - கொரானா தடுப்பு & பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் கடைபிடிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி) *நிகழ்விடம்:*  விஷ்ணு குடில். கோட்டைப் பாளையம். (Near ESSAR Petrol Bunk) (கோவில்பாளையம் - தொட்டிபாளையம் - வெள்ளமடை சாலை / வெள்ளமடை - தொட்டிபாளையம் - கோவில் பாளையம் சாலை) *பயிற்சியாளர்:* அலோ வெ...

இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை வாய்ப்புகளை வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வழங்க உள்ளது

Image
சேத்தியாத்தோப்பு கூட்ரோடு மற்றும் வடலூருக்கும் இடையே அமைந்துள்ள பின்னலூர் கிராமத்தில் , தலைகுளம் சாலையில் அமைந்துள்ள வீரநாராயணன்  FPO அலுவலக வளாகத்தில் , வரும் 20-1-2022ம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு , வயல்வெளி  பார்வையிடல் நிகழ்வு நடைபெற உள்ளது...  நமது கடலூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் தங்களிடம் உள்ள இயற்கை முறையில் விளைந்த அரிசி உள்ளிட்ட விளைபொருட்களின் மாதிரிகளுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்....  இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை வாய்ப்புகளை வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வழங்க உள்ளது... நமது குழுவில் உள்ள இயற்கை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.....  தொடர்புக்கு..  நடராஜன் பிள்ளை  :9 944453035.                 சுரேஷ் குமார்-9443119111 தில்லை கோவிந்தன்:9787483173

அத்திபழம் ,மருதம் பட்டை, அவரம் பூ, ஜாதிக்காய், திராட்சையின் நற்குணங்களுடன் ஆரோக்கியத்திர்கான அமிர்தம்

Image
உயர்தரமான பழங்களைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டது.  நன்மைகள் :   ❤️செரிமானத்தை தூண்டுகிறது ,  பசியை ஏற்படுத்துகிறது . ❤️இதயம் , சிறுநீரக செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது .  ❤️ உறைந்த சளியை வெளியே கொண்டு வருகிறது .  ❤️ டைப் -2 நீரழிவைத் தடுக்க துணைபுரிகிறது .    ❤️ எலும்புகளுக்கு பலம் அளிக்கிறது .  ❤️ எலும்பு தேய்மானத்தைத் தடுக்கிறது . ❤️ விளையாட்டு வீரர்களுக்கு சிறந்தது .   ❤️ உடல் சூட்டை குறைத்து , புத்துணர்ச்சி தருகிறது .  ❤️ புற்றுநோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது .  ❤️ மருந்து மாத்திரைகளால் மெலிந்த உடல் தேறுகிறது .  ❤️ வயிற்றுப் புண் , வயிற்றுப் பொருமல் , நெஞ்செரிச்சல் ஆகியவற்றிற்க்கு உகந்தது .  ❤️ சருமம் பொலிவடையச் செய்கிறது . முடி உதிர்வதை தடுக்கிறது .  ❤️ இரத்ததில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்கிறது .   ❤️ பெண்களுக்கு வலியற்ற மாதவிடாய் ஏற்பட உதவுகிறது .   ❤️ பெண்களின் சினைப்பை நீர்க்கட்டி PCOD / PCOS கரைய உதவுகிறது . அனைத்து வ...

திணைநெறி பண்ணை வடிவாக்கம் & நிர்வாகம் பயில்கைப் படிப்பு (Thinai Farm Design Course - 60 days Residential)

Image
திணைநெறி ---------------- பண்ணை வடிவாக்கம் & நிர்வாகம்  --------------------------------------------- பயில்கைப் படிப்பு  (Thinai Farm Design Course - 60 days Residential) ------------------------------------------------------ வேளாண்மையில் இளைஞர்களை ஊக்குவிக்கவும், வேளாண்மையைக் கட்டுபடியான வாழ்வியலாக மாற்றவும் பசுமைப் பொருளியலை முன்னெடுக்கவும் இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு தொல்காப்பியம் கோட்பாடு முதல் இன்றைய நவீன அறிவியல் கோட்பாடுகளை உள்ளடக்கி பண்ணை நிர்வாகத்தின் அனைத்து அடிப்படைகளையும் பயிற்றுவித்து வேலைவாய்ப்பிற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று கருதினோம். அந்த முறையில் முதற்கட்டமாக 15 பேர்களைத் தேர்வு செய்ய உள்ளோம். இவர்கள் 60 நாட்கள் நம்முடன் இருப்பார்கள். தமிழகத்தின் தலை சிறந்த இயற்கை வேளாண் வல்லுநர்களுடன் தங்கிப் பயிலும் வாய்ப்பு தரப்படும். இதற்கான பாடத்திட்டம், கால அட்டவணை தயாராக உள்ளது.  வகுப்புகள் பொதிகைச் சோலை என்ற திணை ஊரில் வைத்து நடைபெறும். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் குற்றாலத்திற்கு அருகில் உள்ள தலையணை அருவியின் மடி...

வேளாண்மை பொறியியல் துறை 2022 நிறைவேற்றப்படும் திட்டங்கள்

Image
தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை  2022 நிறைவேற்றப்படும் திட்டங்கள்.. திட்டம் 1 : திட்டம் 2 : திட்டம் 3 : திட்டம் 4 : திட்டம் 5 : மேலும் இது போன்ற வேளாண்மை பொறியியல் துறையில்   நிறைவேற்றப்படும் திட்டங்களைத் தங்கள் பகுதியில் இருக்கும் விவசாய அலுவலகத்தில் சென்று நேரடியாக தெரிந்து கொள்ளுங்கள் 

கோவை மாவட்டம் செஞ்சோலை இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் இயற்கைவழி வேளாண்மை களப்பயிற்சி

Image
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் இயற்கைவழி வேளாண்மை களப்பயிற்சி கடந்த சனிக்கிழமை 08.01.2022 அன்று நடைபெற்றது இந்த நிகழ்வில் கோவை, ஈரோடு, திருப்பூர் , சங்ககிரி , கிருஷ்ணகிரி , கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் இருந்து 30 நபர்கள் கலந்துகொண்டனர். பயிற்சியில் மண் வளப்படுத்துதல், நிரந்தரவேளாண்மை (மேட்டுப்பாத்தி , இருமடிப்பாத்தி) ,காய்கறி & கீரை சாகுபடி, கால்நடை பராமரிப்பு  ,இயற்கைவழி பயிர் ஊக்கிகள் தயாரிப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம் ,பண்ணை வடிவமைப்பின் படிநிலைகள் ,பண்ணை நிர்வாகம்  என பல பயிற்சிகள் வழங்கப்பட்டது மேலும் இது போன்ற பயிற்சிகளில் இனிவரும் நாட்களில் கலந்துகொள்ள விருப்பம் எனில் கீழ்வரும் தொடர்பு எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் செஞ்சோலை செந்தில் 9566665654  9600873444  செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணை, கலங்கல் சாலை, சூலூர், கோவை மாவட்டம். https://maps.app.goo.gl/9GeKqoa8iviNCCai8

சீர்காழி டிவி யூடியூப் சேனலும் உழவனின் நண்பன் எனும் விருது ஸ்ரீ சங்கரா டிவி சார்பாக வழங்கப்பட்டது

Image
Sri Sankara TV வழங்கும் விவசாய விருதுகள் 2022 நிகழ்ச்சி நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுவதாக இருந்தது. கொரோனா மூன்றாவது அலை பரவுதல் காரணமாக நிகழ்ச்சி நடைபெறுவது தடை ஏற்பட்டது.. இருப்பினும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேரடியாக இல்லம் தேடி வந்து மண்புழு எப்படி உழவனின் நண்பன் என்று சொல்வார்களே அதுபோல யூ டியூப் மூலமாக உழவர்களுக்கு உதவும் சீர்காழி டிவி யூடியூப் சேனலும் உழவனின் நண்பன் தான் என்று உழவனின் நண்பன் எனும் உயரிய விருதினை நமது சீர்காழி டிவிக்கு வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.. இந்த விருதினை நாம் பெறுவதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தது சப்ஸ்கிரிபர்கள் ஆகிய நீங்கள் தான் உங்கள் அனைவருக்கும் சீர்காழி டிவி சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.. இந்த விருதிற்கு பரிந்துரைத்த மண்வாசனை மேனகா மற்றும் திருப்பூர் பிரியா ராஜநாராயணன் அவர்களுக்கும் மிக்க நன்றி..