திணைநெறி பண்ணை வடிவாக்கம் & நிர்வாகம் பயில்கைப் படிப்பு (Thinai Farm Design Course - 60 days Residential)
திணைநெறி
----------------
பண்ணை வடிவாக்கம் & நிர்வாகம்
---------------------------------------------
பயில்கைப் படிப்பு
(Thinai Farm Design Course - 60 days Residential)
------------------------------------------------------
வேளாண்மையில் இளைஞர்களை ஊக்குவிக்கவும், வேளாண்மையைக் கட்டுபடியான வாழ்வியலாக மாற்றவும் பசுமைப் பொருளியலை முன்னெடுக்கவும் இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு தொல்காப்பியம் கோட்பாடு முதல் இன்றைய நவீன அறிவியல் கோட்பாடுகளை உள்ளடக்கி
பண்ணை நிர்வாகத்தின் அனைத்து அடிப்படைகளையும் பயிற்றுவித்து வேலைவாய்ப்பிற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று கருதினோம். அந்த முறையில் முதற்கட்டமாக 15 பேர்களைத் தேர்வு செய்ய உள்ளோம். இவர்கள் 60 நாட்கள் நம்முடன் இருப்பார்கள். தமிழகத்தின் தலை சிறந்த இயற்கை வேளாண் வல்லுநர்களுடன் தங்கிப் பயிலும் வாய்ப்பு தரப்படும். இதற்கான பாடத்திட்டம், கால அட்டவணை தயாராக உள்ளது.
வகுப்புகள் பொதிகைச் சோலை என்ற திணை ஊரில் வைத்து நடைபெறும். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் குற்றாலத்திற்கு அருகில் உள்ள தலையணை அருவியின் மடியில் 103 பேர்கள் இணைந்த கூட்டுப் பண்ணையாக பொதிகைச்சோலை வாழ்வூர்(Eco-Village) அமைந்துள்ளது. இது தவிர மற்றப் பண்ணைகளிலும் வகுப்புகள் நடைபெறும்
அடுத்த மாதம் பயிற்சிப் படிப்பு தொடங்கவுள்ளது.
----------------------------------------------------------------
பயிற்சிப் படிப்பிற்கான கட்டணம் உண்டு.
கட்டணம் செலுத்த இயலாவர்களுக்கு படிப்பு உதவித் தொகையும் (Scholarship) உண்டு.
உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.அதற்கான பதிவு செய்ய வேண்டிய வினாத்தாள் படிவம் மற்ற விவரங்கள் இணையவழியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வலர்கள் அதில் தங்களது தகவல்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe8uCo0lxEjOmogf8K9HWG3G72pJjMM4B5Dm5MrOvjjhOk_CA/viewform?usp=pp_url
ஆர்வமுள்ளவர்கள் 9486301575 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்,
அல்லது multiversityinfo@gmail.com
அல்லது rajganesh.m@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்
Iam kajen from jaffa
ReplyDeleteநான் எவ்வாறு பங்கேற்க முடியும்
Iam intersted
ReplyDeleteவாழ்த்துக்கள் அருமை
ReplyDeleteநிச்சயம் இந்த பயிர்ச்சி பங்கேர்ப்போர் அனைவருக்கு மிகச்சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்க வழிவகை செய்யும்
ReplyDeleteIyarkai vivasayam seiya enakku payirchi vendum my cell Number 9345765576
ReplyDelete